ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்..!
இலங்கையில் நாளை 14ம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது.
முன்னதாக இரவு 11 மணிக்கு அதிகாலை 4மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடைமுறை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை என மாற்றப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.