தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை: இலங்கை தமிழ் அரசுக் கட்சி

ஆசிரியர் - Admin
தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை: இலங்கை தமிழ் அரசுக் கட்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.


இதன் முதற் கட்டமாக, தற்காக குழு வொன்றினை உருவாக்கி குறித்த குழுவானது ஓவ்வொரு வட்டாரம் கிராமங்கள் பிரததேசங்கள் சென்று கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்கள்.


இதற்கமைவாக கோரிக்கைகள் முன்வைத்த பிரதேசங்களில் உள்ள சமுக கட்டமைப்புக்கள் பொதுஅமைப்புக்களுடக கலந்துரையாடலை மேற்கொண்டுவருகின்றனர்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது.


மாதகல் கிராம அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக வலிகாமம் தென்மேற்கு பிதேச சபையில் போட்டியிட்டு வெற்றிபெற்ர விஸ்வநாதன்சுப்பிரமணியம் தலைமையில் அப்பகுதி இளைஞர்களுடன் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட கிளையின் தலைவர் பெ. கனகசபாபதி மற்ரும் வலிவடக்கு பிரதேச சபையின் உறுப்பினா் சே. கலைஅமுதனும் கலந்து கொண்டு அக் கிராமத்து தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு