SuperTopAds

லீசிங் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிப்பது சட்டவிரோத செயல்..! மீறினால் நடவடிக்கை எடுங்கள் ஐனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
லீசிங் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிப்பது சட்டவிரோத செயல்..! மீறினால் நடவடிக்கை எடுங்கள் ஐனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு..

இலங்கையில் தற்போதுள்ள சூழலை கருதி லீசிங் கட்டுப்பணம் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வது, சட்டவிரோதமானது. 

என சுட்டிக்காட்டியிருக்கும் ஐனாதிபதி தவணைகளை செலுத்தாத காரணத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட்19 காரணமாக லீசிங் கடன்தவணைகளை 6 மாதங்களுக்கு ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி  செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி 

வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.