அரசு வழங்கும் நல திட்டங்களை மக்களுக்கு வழங்க இழுத்தடிக்கும் வங்கிகள்..! கடுப்பான ஜனாதிபதி, வீட்டுக்கு அனுப்ப தயங்கமாட்டேன் என எச்சரிக்கை..
வர்த்தகம் செய்வது மட்டும் வங்கிகளின் பணி அல்ல. அரசாங்கம் மக்களின் நலன்களுக்காக வழங்கும் நிவராண திட்டங்களை மக்களுக்கு வழங்குவதும் அவர்களுக்குரிய கடமையே ஆகும்.
அதனை செய்ய முடியாத வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதியவர்களை உள்வாங்கி நாட்டு மக்களுக்காக தொடர்ந்து செயற்படுவதற்கு நான் தயங்கமாட்டேன்.
மேற்கண்டவாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார். பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள சம்பிரதாயபூர்வமான சிந்தனை மற்றும் வேலை செய்யும் முறைமைகளுக்கு புறம்பாக
தீர்மானங்களை எடுக்க தயங்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்நோக்கும் பொருளாதார மறுவாழ்வுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும்
வேலைத்திட்டங்களை தெளிவுப்படுத்தவும் அரச நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற வர்த்தக சமூகத்துடனான சந்திப்பில்
ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். நிறுவனங்கள் துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்க்க முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.