சிறுவனை கைது செய்ய தவறியாமைக்காகவே 3 பொலிஸார் பணி நீக்கம்..! சிறுவன் மீது தாக்குதல் நடந்தமைக்கு சாட்சி இல்லையாம்..
அளுத்கம- தர்கா நகரில் சிறுவன் மீது பொலிஸாரும், விதியில் நின்றிருந்த காடையர்களும் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பொலிஸாரும்
சிறுவனை கைது செய்யாமைக்காகவே பணி நீக்கம் செய்யப்பட்டனர் எனவும் அவர்கள் மீது நடாத்தப்படும் விசாரணையின் இறுதியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ண கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
மூன்று பொலிஸாரும் சிறுவனை கைதுசெய்ய தவறியுள்ளனர், என தெரிவித்துள்ள அவர் சிறுவனின் தந்தை வந்ததும் அவனை விடுவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கைதுகுறித்து முறைப்பாட்டை எழுத தவறியுள்ளனர்.
என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இதன் காரணமாக அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன
விசாரணைகளின் முடிவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சிறுவன் மீது தாக்குதலை மேற்கொண்டமைக்காக அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை
என அவர் குறிப்பிட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளில் தாக்குதல் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை நானும் அதனை பார்த்தேன் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் பொலிஸார் சிறுவனை கட்டுப்படுத்த முயன்றனர்.
ஆனால் தாக்குதல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.சிறுவனின் உடல்நிலை குறித்து பொலிஸார் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் பொலிஸாரினால் அதனை
உறுதி செய்ய முடியவில்லை,சிறுவன் போதைப்பொருள் பயன்படுத்தியவன் போன்று காணப்பட்டான் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.