தேர்தல் ஆணையாளர் தலமையில் இன்று நடந்த தேர்தல்..! இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி மக்கள் வாக்களிப்பு..
இலங்கையில் கொரோனா அபாயத்திற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி தேர்தலை நடாத்துவது எவ்வாறு? என அறிவதற்கான பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இன்று காலை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஒத்திகையின் போது,
வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படவுள்ளது.