பிரத்தியேக மருத்துவமனைகள் தம் சுகாதாரத்தை நூறுவீதம் உறுதிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்

ஆசிரியர் - Admin
பிரத்தியேக மருத்துவமனைகள் தம் சுகாதாரத்தை நூறுவீதம் உறுதிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்

வட­மா­கா­ணத்தில் குறிப்­பாக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் தினமும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான நோயா­ளர்கள் தமக்­கு­ரிய வைத்­திய உத­வி­களை வெளி­நோ­யாளர் பிரிவில் பெற்றுச் செல்­கின்­றார்கள்.  அதற்கு மேல­தி­க­மாக வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்தும் சிகிச்சை பெற்று வெளி­யே­று­கின்­றார்கள்..  இருந்தும் பல நோயா­ளர்கள் அல்­லது விபத்­துக்­களில் சிக்கி உயி­ரி­ழப்­புக்­களின் எண்­ணிக்கை தினம் தினம் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றது.

இதனைக் கட்­டுப்­ப­டுத்த நாம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.  பொது­வாக மருத்­து­வர்கள் இரவு பக­லாக மருத்­துவப் பணி­களில் ஈடு­பட்­டி­ருப்­பது பொது­மக்­களின் கவ­னத்­துக்கு எடுத்துச் செல்­லப்­ப­டு­வ­தில்லை.  மாறாக வைத்­திய அதி­கா­ரிகள் பிரத்­தி­யேக வைத்­தி­ய­சா­லை­களில்  பணம் சம்­பா­திக்­கின்­றார்கள்.


இல­வச மருத்­து­வ­ம­னை­களில் அவர்­களின் சேவைகள் திருப்­தி­க­ர­மாகக் கிடைக்­கப்­பெ­று­வ­தில்லை என்ற கருத்தே மக்கள் மத்­தியில் விதைக்­கப்­பட்­டுள்­ளது. எனவும்,

இது முற்­றிலும் தவ­றா­னது என்று நான் கரு­து­கின்றேன்.  வைத்­திய நிபு­ணர்கள் பிரத்­தி­யேக வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு செல்­வது உண்மை. ஆனால், அவர்கள் தமது கட­மை­க­ளுக்கு மேல­தி­க­மான நேரங்­க­ளி­லேயே இவ்­வா­றான விசேட கட­மை­களை ஆற்றி வரு­கின்­றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இல­வச மருத்­து­வ­ம­னை­களில் அவர்­களின் சேவை­களை நான் நேர­டி­யாகப் பெற்று  பயன் பெற்­றவன்.

அந்­த­வ­கையில் அவர்­க­ளுக்கு எனது அங்­கீ­கா­ரத்தை  வழங்­கு­வதில் தயக்­க­மு­மில்லை.  எம்முள் பலர் களி­யாட்ட நிகழ்­வு­க­ளிலும், உணவு விடு­தி­க­ளிலும் பொழு­து­களைக் கழிக்­கின்­ற­போது வைத்­திய நிபு­ணர்கள் நோயா­ளி­களை கவ­னிப்­ப­திலும் அவர்­க­ளுக்­கு­ரிய மருத்­துவ சேவை­களை வழங்­கு­வ­திலும் முழு நேரத்­தையும் செல­வி­டு­கின்­றார்கள்.


தவ­றான மருத்­துவ விநி­யோகம், பயிற்­சி­யற்ற தாதி­யர்­களை , பணி­யா­ளர்­களை வேலைக்­க­மர்த்தல் போன்­றவை நோயா­ளி­களை நிரந்­தர ஊனர்­க­ளாக மாற்­றி­விட சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டு­கின்­றன.  எனவே, பிரத்­தி­யேக மருத்­து­வ­ம­னைகள் மற்றும் வைத்­திய ஆலோ­சனை நிலை­யங்­களை நடத்­து­கின்ற அனைத்து முகா­மைத்­து­வங்­க­ளுக்கும் ஓர் அன்­பான வேண்­டு­தலை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு