பொலிஸாருடன் மக்களின் வீடுகளுக்குள் நுழையும் மர்மநபர்கள் யார்..? விசாரணை நடாத்த உத்தரவு..
பொதுமக்களின் விபரம் பெறுவதற்காக பொலிஸாருடன் செல்லும் சிவில் உடையணிந்த மர்ம நபர்கள் யார்? என விசாரணை நடாத்துமாறு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
தேசிய பாதுகாப்பு நடவடிக்கையாக கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்கள் வாக்காளர் பதிவற்றவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அண்மையில் அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீடுகளுக்கு பொலிஸாருடன் சிவில் உடையில் மர்ம நபர்களும் சென்று
தகவல் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.