முல்லைத்தீவு- நித்தகை குளம் மற்றும் வயல் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- நித்தகை குளம் மற்றும் வயல் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்.

நித்தகைக்குளம் அதனோடு இணைந்த வயல்நிலங்களை விடுவிப்புச் செய்வதுடன், குளம் மற்றும் அங்கு செல்வதற்கான வீதியினையும் மறுசீரமைப்புச் செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்கவேண்டும் ரவிகரன் கூறியுள்ளார். 


முல்லைத்தீவு – ஆண்டான்குளம், நித்தகைக்குளம் மற்றும் அதனோடிi ணந்த வயல் நிலங்களை விடுவிப்புச்செய்வதுடன், சேதமடைந்து காணப்படும்  குளம் மற்றும் அங்கு செல்வதற்கான வீதியையும் மறுசீரமைப்பு செய்து மக்கள் பாவனைக்காக விடப்படவேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 


நித்தகைக்குளம் விடுவிப்பு மற்றும் மறுசீரமைப்பு போன்ற வி;டயங்கள் தொடர்பாக குமுழமுனை கிழக்கு, கமக்கார அமைப்பினரால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் 01.02.2018ம் நாளன்று கமக்கார அமைப்பினரின் அழைப்பையேற்று அப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் மூலமாக அங்குள்ள நிலவரங்களை என்னால் அறியமுடிந்தது.


ஒரு பாரிய வரலாற்றை தன்னகத்தே கொண்டதோடு மட்டுமல்லாது, ஒரு காலத்தில் 935 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்களுக்கு தேவையான நீரை வழங்கிய இந்தக் குளமானது தற்போது மிக மோசமாகப் பாதிப்படைந்து காணப்படுகின்றது. அதேபோன்று இந்த குளத்தின் நீரினைப்பெற்று வருடத்தின் இருபோகங்களிலும் பாரிய விளைச்சலுடன் காணப்பட்ட  வயல்நிலங்கள் பற்றைகளாக, தரிசுநிலங்களாக காட்சி தருகின்றன.  


மேலும் இந்தப் பகுதி விடுவிப்புச் செய்யப்படாமல் காணப்படவதால்; குளத்திற்கும் வயல்நிலங்களுக்கு செல்கின்ற பாதைகள் மிக மோசமாக பாதிப்படைந்து காணப்படுகின்றது.


இந்த குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நிலங்கள் இன்றுவரை விடுவிக்கப்படாமல் காணப்படுவதால், அந்தப்பகுதியில் வயல் நிலங்கள் உள்ள மக்களினுடைய அன்றாட பொருண்மியம் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 


மேலும் மக்கள் மீள் குடியமரத்தப்பட்டு ஒன்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை இந்தப்பகுதி வயல் நிலங்கள் மற்றும் குளங்கள் விடுவிக்கப்பாமலிருப்பது வேதனைக்குரியதாகவுள்ளது.

எனவே மக்களின் அன்றாட பொருளாதாரத்தினை வளப்பத்துவதற்காகவும் ஒட்டுமொத்த மாவட்டத்தின் 


பொருளாதாரத்தினை மேன்மைடையச் செய்வதற்காகவும் உரிய அதிகாரிகள் இந்தக் குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நில்களை விடுவிப்புச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, குளத்தினை மறுசீரமைத்து மக்களிடம் கையளிக்க வேண்டும்.


 மேலும் அங்கு செல்வதற்கான வீதியையும் மறுசீரமைத்து கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு