ஞாயிற்று கிழமை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? தீர்மானம் இல்லை என்கிறது அரசு..
இலங்கையில் ஞாயிற்று கிழமைகளில் நாடு தழுவியரீதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் எவையும் எடுக்கப்படவில்லை. என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்டதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிறு அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.