SuperTopAds

கொவிட் -19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி அன்பளிப்பு வழங்கிய ஐனாதிபதிக்கு கடிதம் எழுதிய பாடசாலை சிறுமி..! பாராட்டி பதில் எழுதிய ஐனாதிபதி..

ஆசிரியர் - Editor I
கொவிட் -19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி அன்பளிப்பு வழங்கிய ஐனாதிபதிக்கு கடிதம் எழுதிய பாடசாலை சிறுமி..! பாராட்டி பதில் எழுதிய ஐனாதிபதி..

கொவிட் -19 பாதுகாப்பு நிதியத்திற்கு தன்னாலான நிதி உதவியை வழங்கிய பாடசாலை மாணவிக்கு ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்‌ஷ பாராட்டுக்களையும் நன்றிகளையும் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதம் தமிழில் அப்படியே தரப்படுகிறது..

அன்புள்ள ரோஹன்சா மகளுக்கு,

மகளே, முதலில், நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு நான் செய்த சேவையைப் பாராட்டியதற்கு நன்றி.

உங்கள் பங்களிப்புகள் ‘செய்கடமை’ COVID-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

உங்களைப் போன்ற  குழந்தைகளிடம் எம் தாய்நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜனாதிபதியாக எனக்கு வழங்கப்பட்டுள்ள 

எனது அதிகாரங்களை, உங்களைப் போன்ற வருங்கால சந்ததியினர் வாழ்வதற்கு தகுதியான சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியைக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்குவதற்கே நான் பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.

குழந்தைப் பருவம் என்பது நம் வாழ்வின் மகிழ்ச்சியான காலங்களில் ஒன்றாகும்.

நீங்கள் அதனை முறையான கல்வியை பெறுவதற்கும் உங்களது திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தி - இலங்கையின் பெயரை சர்வதேச அளவில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தக்கூடிய புதுமைகளை நீங்கள் தேட வேண்டும்.

உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

நம் நாட்டை நேசிப்போம்.  நமக்கு வரும் அனைத்து தடைகளையும் வெற்றி கொள்வோம்.