14 வயது சிறுவன் மீது பொலிஸார், ரவுடிகள் இணைந்து தாக்குதல்..! இதற்கு நீதி கோருவது யார்..?
அளுத்கம- தர்கா நகரில் 14 வயதான முஸ்லிம் சிறுவன் மீது பொலிஸார் மற்றும் ரவுடிகள் இணைந்து அடித்து துன்புறுத்தும் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி நீதி கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
கடந்த மே 25ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா வெளியிட்டுள்ளார். குறித்த சிறுவனுக்கு கடுமையான காயங்கள்
உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை. பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.