SuperTopAds

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான நடைமுறையில் மாற்றம்..! அமைச்சரவை ஒப்புதல்..

ஆசிரியர் - Editor I
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான நடைமுறையில் மாற்றம்..! அமைச்சரவை ஒப்புதல்..

இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு தனியார் சாரதி பயிற்சி பாடசாலைகள் ஊடாக நடாத்தப்படும் செயன்முறை பரீட்சை நடைமுறையை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. 

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான 

செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்துவதற்கு 2017ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த அனுமதியை தற்போதைய அமைச்சரவை இரத்துச் செய்துள்ளது.