SuperTopAds

அதிகளவான நோயாளர்கள் நாட்டுக்குள் நுழைவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை..! திணறுகிறது அரசாங்கம், நிலமை படுமோசமாக மாறப்போவதாக எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
அதிகளவான நோயாளர்கள் நாட்டுக்குள் நுழைவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை..! திணறுகிறது அரசாங்கம், நிலமை படுமோசமாக மாறப்போவதாக எச்சரிக்கை..

இலங்கையில் சடுதியாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து அதிகளவான நோயாளர்கள் நாட்டுக்குள் வருவார்கள் என தாம் எதிர்பார்க்கவில்லை. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியிருக்கின்றார். 

கொரொனா வைரஸ் தொற்றுடன் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுவது தற்போதைய நிலைமைக்கு பொருத்தமற்றதாகும். இதுவொரு ஆபத்தான நிலை என அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடாக நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு 

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1663 ஆகும். இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சுமார் 500 பேர் வரையில் உள்ளனர். அடுத்து வரும் வாரங்களில் வெளிநாடுகளிலிருந்துவரவுள்ளோரினால் எண்ணிக்கை 

பல மடங்காக அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதார நிலைமைக்கு அமைய 2500 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அது பெரும் அபத்தான நிலையாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.