SuperTopAds

வெள்ளைமாளிகை முற்றுகை!! -பதுங்கு குழியில் பதுங்கிய டிரம்ப்-

ஆசிரியர் - Editor III
வெள்ளைமாளிகை முற்றுகை!! -பதுங்கு குழியில் பதுங்கிய டிரம்ப்-

அமெரிக்காவில் வலுவடையும் போராட்டங்களை அடுத்து வெள்ளை மாளிகையும் போராட்டம் நடத்துபவர்களால் முற்றுகையிட்டதால் டொனால்ட் டிரம்ப் நிலத்தடி பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுக்காக்கபட்டார் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. 

அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும்,

அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.