கொள்ளைக் கும்பல் கோப்பாய் பொலிஸாரிடம் சிக்கியது

ஆசிரியர் - Admin
கொள்ளைக் கும்பல் கோப்பாய் பொலிஸாரிடம் சிக்கியது

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இடம்பெற்ற விசாரணையிலேயே இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த 20 தொடக்கம் 23 வயதுகளையுடைய மூவரே கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் பல கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 15 பவுண் உருககப்பட்ட பவுண் கட்டிகள் இரண்டு மீட்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

கொள்ளைக் கும்பலின் திருட்டு நகைகளைப் பெற்று அதை உரு மாற்றும் வேலை செய்துவந்த கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு