உள்ளாடையை முகக்கவமாக அணிந்துவந்த பெண்!! -தபால் நிலையத்திற்கு வந்த போது சம்பவம்-
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணியும் முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சியால் அதிர்ச்சி
உக்ரைனில் 2 குழந்தைகளின் தாய் தபால் நிலையம் ஒன்றிற்கு முகக்கவசம் அணியாமல் வந்திருந்த நிiலியல் அவர் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக மாற்றிக் கொண்ட காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, பொது இடத்திற்கு எங்கு சென்றாலும், தங்களின் அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அல்லது சுவாசக் கருவி அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த விதிகள் நாட்டில் இருக்கும் கடைகள், சந்தைகள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கிவில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றிற்கு இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வருகிறார். அப்போது அவர் அங்கு பணியாற்றும் ஊழியரிடம் பேசுவது போன்று உள்ளது.
அதன் பின் உடனடியாக தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்துகிறார். இது அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாக, அதன் ஊழியர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இருப்பினும் நிறுவனத்தின் இந்த வீடியோவை பகிர்ந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசி ஒருவர், அவள் ஒரு சரியான வழியை கண்டுபிடித்துள்ளார். முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடைகளை பயன்படுத்த யாரும் இதுவரை தடை விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.