விளையாட்டு வினையானது..! வெடிபொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயம்..
கைவிடப்பட்ட படைமுகாமுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கிருந்து எடுத்த வெடிபொருள் ஒன்றை சுத்தியலால் அடித்து திறக்க முயற்சித்தபோது அது வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் செட்டிகுளம்- வாழவைத்த குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. அந்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர்
மர்மப்பொருள் ஒன்றை எடுத்துசென்று சுற்றியல் ஒன்றினால் அதனை அடித்துள்ளனர். அதன்போது அந்தப் பொருள் திடீர் என்று வெடித்துள்ளது. சிறுவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு செட்டிகுளம்
பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தனர். இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்கா வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் சனாஸ் (வயது – 12) முகமட் ராசித் (வயது -16) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.