இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவபீடங்களையும் திறக்க தீர்மானம்..! அரசின் அறிவிப்பு வெளியானது..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவபீடங்களையும் திறக்க தீர்மானம்..! அரசின் அறிவிப்பு வெளியானது..

இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கின்றது. 

மருத்துவ பீடத்தின் இறுதி வருட மாணவர்களின் பரீட்சைக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தலைமையிலான சுகாதார குழுவினருடன் 

மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். மருத்துவ பீடத்தின் ஒவ்வொரு மாணவருக்கும் 

தனித்தனியே விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி கண்காணித்த பின்னரே 

மருத்துவ பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், 

பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு