நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வேண்டுகோள்..!
66 நாட்களின் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இன்று காலை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடித்து அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
பாதுகாப்புடன் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு உதவுங்கள்.
இன்று அதிகாலை 5 மணி முதல் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டம் மீள் அறிவுப்பு வரும் வரை
தினமும் அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 10 மணிக்கும் மீளவும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளளது.
அதற்கமைய 66 நாட்களின் பின்னர் முதல் முறையாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.