மத்திய கிழக்கிலிருந்து அழைக்கப்பட்ட 649 போில் 70 பேருக்கு கொரோனா..! சகல நடவடிக்கைகளையும் சடுதியாக நிறுத்தியது அரசு..
குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த 649 போில் 70 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், கட்டாரில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதனை வெளியுறவுத்துறைக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.குவைத்திலிருந்து இலங்கைக்கு கடந்த (19/05) 19 ஆம் திகதி அழைத்துவரப்பட்ட இலங்கை பிரஜைகள் 649 பேரில் 70 பேருக்கு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கட்டாரின் டோகா நகரிலிருந்து 273 இலங்கையர்கள் நாளை காலை 5.43 மணியளவில், ஸ்ரீ லங்கா விமானசேவைக்குச் சொந்தமான
விமானத்தில் அழைத்துவர ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தென் ஆபிரிக்காவிலிருந்து நாடுதிரும்பமுடியாமல் கடந்த இரண்டு மாதங்காளாக சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர்
எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 6.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இவர் எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியற்றிவரும் நிலையில், மேலதிக பயிற்சிக்காக
தென் ஆபிரிக்காவிற்கு சென்றிருந்தபோது கொரோனா நெருக்கடி காரணமாக நாடுதிரும்ப முடியாது இருந்தார். இதனையடுத்து இன்று மாலை டுபாயிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமானநிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.