மத வழிபாட்டு தலங்களை திறப்பதா..? இல்லையா..? தீர்மானத்தை வெளியிட்டது அரசு..
நாளை ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மத வழிபாட்டு தலங்களில் வழிபாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. என பௌத்தசாசன அமைச்சு கூறியுள்ளது.
காலை முதல் இரவு வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட வேண்டும் என அமைச்சின் மேலதிக செயலாளர் கூறினார்.
இதேவேளை போயா தினங்களிலும் பௌத்த ஆலயங்களை மூடி வைக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்றும் இது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.