இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு தனியான அரசு பேருந்து சேவை..! நவீன வசதிகளுடன் புதிய திட்டங்களை இ.போ.சவுக்கு வழங்கினார் ஜனாதிபதி..
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக தனியான அரச போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவேண்டும். இதற்காக பிரத்தியே பேருந்துகளும் ஒழுங்கமைக்கப்படவேண்டும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.
மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளைபோல் வாகன நொிசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு சொந்த வாகனங்களில் வருவோர் தேவை எற்படின் தமது வாகனங்களை பொது வாகன தரிப்பிடத்தில் மிக பாதுகாப்பாக நிறுத்திவைத்துவிட்டு அரச போக்குவரத்து சேவையை பயன்படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார்.கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில்
அதிக வாகன நெறிசல் காணப்படுகின்றது. இந்த நெறிசலை குறைப்பதற்காகத் தமது சொந்த மகிழூந்துகளில் (Car) பணிகளுக்கு வருவோரைப் பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்குத் தீர்வாக, ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்திவிட்டு அலுவலகங்களுக்கு பொதுப் போக்குவரத்து வண்டிகளில் பயணம் செய்வதற்குத் தேவையான Park and Ride முறை ஒன்றினை உடனடியாக அறிமுகப்படுத்துமாறும் அவர் முன்மொழிந்தார்.
இதற்கு, முழுமையான வசதிகளைக் கொண்ட பேரூந்து வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.பாடசாலை மாணவர்களுக்காக, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பேரூந்து சேவையை மேம்படுத்த வேண்டும். பாடசாலைப் பேரூந்துகளை வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு
மஞ்சல் நிற பூச்சுமை பூசப்பட்டு, வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதி தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.