SuperTopAds

இன்றுடன் ஆபத்து தணியலாம்..! மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மறு அறிவித்தல்வரை தொடரும்..

ஆசிரியர் - Editor I
இன்றுடன் ஆபத்து தணியலாம்..! மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மறு அறிவித்தல்வரை தொடரும்..

திருகோணமலையிலிருந்து 1070 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் “அம்பான்” சூறாவளி இன்று வடகிழக்கு திசையின் ஊடாக நகர்ந்து இலங்கைக்கு அப்பால் செல்லவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி மொஹமட் ஷாலிஹின் கூறியுள்ளார். 

இந்த சூறாவளி நாளை பிற்பகல் வங்காள தேசத்தின் மேற்கு கரையை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன், சூறாவளியின் தாக்கம் காரணமாக சப்பிரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களின் தற்போதைய வானிலை தொடருமெனவும் கேகாலை, களுத்துறை,காலி, மாத்தறை, இரத்தினபுரி, 

நுவரெலியா ஈகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்யும் எனவும் வானிலை அதிகாரி, மேலும் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் உருவாகிய அம்பன் சூறாவளியின் காரணமாக இலங்கையை சூழவுள்ள கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையையும் , பலத்த காற்றும் வீசும்.

இதனால் மீனவர்களும் , கடற்சார் தொழிலாளர்களும் மறுஅறிவித்தல் வரும்வரை கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.