ஜனாதிபதியால் திறந்துவிடப்பட்ட பாதை: இராணுவத்தின் பாதுகாப்புடனேயே தொடரும் பஸ் பயணம்

ஆசிரியர் - Admin
ஜனாதிபதியால் திறந்துவிடப்பட்ட பாதை: இராணுவத்தின் பாதுகாப்புடனேயே தொடரும் பஸ் பயணம்

வலிகாமம் வடக்கில் அண்மையில் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதியால் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுயூடாக செல்லும் பஸ் வண்டிக்கு இராணுவத்தினரின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாம் வடக்கு பகுதிகள் யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக பருத்தித்துறை பொன்னாலை வீதியின் மயிலிட்டியில் இருந்து பலாலி வரையான சுமார் 3 கிலோ மீற்றர் இராணுவத்தினரின் ஆளுகைக்குள் இருந்தமையினால் போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தது.

இத் தடையை நீக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் விரைவாக விடுவிக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இம் மாதம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாபதி தனது உரையின்போது தடையேற்படுத்தப்பட்டிருந்த பலாலி மயிலிட்டி வரையான குறித்த வீதி தனது உரை முடிவதற்குள் திறந்துவிடப்படும் என அறிவித்திருந்தார்.

எனினும் ஒரு சில நாட்கள் ஆரம்பிக்கப்படாத நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்துச் சேவையின் பஸ் வண்டிச் சேவைகள் குறிப்பாக பருத்தித்துறை சாலை பஸ் சேவைகள் முறையே 6.45, 11 மற்றும் 3.15 என மூன்று சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

பருத்தித்துறையில் இருந்து கீரிமலை வரையிலான இந்த சேவையில் மயிலிட்டியில் இருந்து பலாலி வரையிலான தூரத்தில் பஸ் பயணிக்கும்போது இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சென்று வருகின்றனர். குறித்த பகுதியில் யாருமற்ற நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பருத்தித்துறையிலிருந்து பொன்னாலை வரையான வீதியானது கடற்கரையோர்தை அண்டியதான பிரதான வீதியாகவே உள்ளது. எனினும் யுத்தத்தின் பின்னரான சூழலில் குறிப்பாக கீரிமலையிலிருந்து காங்கேசன் துறையூடாகச் செல்லும் வீதி இன்றும் திறந்துவிடப்படாத நிலையில் கீரிமலைச் சந்தியிலிருந்து மாவிட்டபுரம் சென்று காங்கேசன் துறை வீதியூடாகவே தற்போது பஸ் பயணங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு