குடும்பத்தை தீவைத்து கொளுத்திய கொடூர இளைஞர்!!
மூன்று சகோதர சகோதரி மற்றும் பெற்றோரை வீட்டுக்குள் பூட்டி வைத்து தீவைத்து கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது தஸ்கா நகர். இங்குள்ள முகமதுபுரா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் 25 வயதான அலி ஹம்சா என அடையாளம் காணப்பட்டார் என்றும் அவரது கெட்ட பழக்கங்கள் மற்றும் போதைப் பழக்கத்தின் காரணமாக அவரது குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார் எனவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டு மொத்த குடும்பமும் கொல்லப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் அஹம்சா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.அவரது தந்தை முஹம்மது அச்ரப் மற்றும் தாய் யஸ்மீன் பிபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சகோதரிகள் சோபியா மற்றும் ஃபவுசியா மற்றும் சகோதரர் ஹைதர் ஆகியோர் சில நாட்களுக்குப் பிறகு லாகூரின் மாயோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
ஹம்சாவின் இளைய சகோதரி ஹர்ரம் செஹ்சாதி மற்றும் சகோதரர் அலி ராசா ஆகியோர் தீக்காயங்களுடன் இன்னமும் தங்கள் உயிருக்கு போராடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.