மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..! நாளை கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக இருக்கும், பொலிஸார், இராணுவம் களத்தில்..
இலங்கை முழுவதும் இன்று இரவு 8 மணி தொடக்கம் திங்கள் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவிருக்கும் நிலையில் கட்டப்பாடுகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது.
நாளை ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்று சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எவரையும்
கைது செய்ய நாளை மறுதினம் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். கொழும்பு மற்றும் கம்பாஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால்,
அடுத்த வாரத்திலும் இந்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுமாறு
அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பொலிஸார் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சில இடங்களில் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க மறுக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.