SuperTopAds

இரு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாமல் போகும்!!

ஆசிரியர் - Editor III
இரு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாமல் போகும்!!

லண்டனில் இன்னும் சில வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

லண்டனைப் பொருத்தவரை மார்ச் 23 இல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 213,000ஆக இருந்தது, இரண்டு வார ஊரடங்கிற்குப் பின் ஏப்ரல் 7 அன்று 10,000 ஆக சரிந்தது. 

லண்டனிலுள்ள சுமார் 15 சதவிகிதம் பேர் ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிட்டதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது, எனவே மீண்டும் வைரஸ் பரவுவது கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் இருந்த வண்ணம் வேலை பார்க்க தொடங்கினர் அவர்களால் வீடுகளில் இருந்தவண்ணமே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்ததும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமாக கருதப்படுகிறது. 

இன்னும் இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.