இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மிக பிழையான கருத்துக்களை கூறி அரசாங்கத்தையும், மக்களையும் அச்சுறுத்துகின்றனர்..!
இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மிக பிழையான கருத்துக்களை வெளியிட்டு அரசாங்கத்தையும், மக்களையும் பீதிக்குள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்
வடமாகாணத்திலுள்ள பிரதிநிதிகளும் அதையே செய்கிறார்கள். எனவும் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர் மீண் டும் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
நேற்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீட்டுக்கு சென்றதன் பின்னான 10 நாட்களில்
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார். அதேபோல் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 10 பேர் ஒரு மாதத்தின் பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர். இதனை ஆய்வு செய்துகுறுக்கு தொற்று தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அறிக்கை சமர்பித்திருந்தேன்.
இதேபோல் மருத்துவ அதிகாரி கள் சங்கத்தின் பொறுப்புவாய்ந்த ஒருவர் குறுக்கு தொற்று ஆபத்தை முற்றாக நீக்க முடியாது என கூறியிருக்கின்றார். ஆகவே குறுக்கு தொற்று தொடர்பாக நான் கூறியதை பிழை என்றவர்களே அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இருந்தும் அவர்கள் அரசுக்கும், சுகாதார துறையினருக்கும் அறிவுறுத்தாமையினால் இன்று நுாற்றுக்கணக்கான கடற்ப டை சிப்பாய்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் நுண்ணுயிரியல் மற்றும் வைரோலஜி தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல.
வேறு துறைகளிலேயே அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே அவர்கள் செய்திருக்கவேண்டியது மருத்துவர் சங்க த்தில் உள்ள துறைசார் நிபுணர்களை அழைத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராய்வதுடன், பேசுவதாகு ம். ஆனால் நிபுணத்துவம் பேசி அரசாங்கத்தையும், மக்களையும்
அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேபோல் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கில் உள்ளவர்களும் கூட அதையே செய்கின்றனர். குறிப்பாக வடக்கு இணைப்பாளர் என கூறுபவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் அல்ல.
மேலும் அவர் கற்றல் விடுமுறையில் உள்ள துறைசார் நிபுணர் அல்ல. இருந்தும் அவர் ஊடங்களுக்கும், சமூக வலைதளங்களிலும் பேசி அரசாங்கத்தையும் மக்களையும் பீதிக்குள் வைத்திருக்கின்றார். குறிப்பாக 42 ஆயிரம் தொற்றாளர்கள் நடமாடுவதா க கூறினார்.
பின்னர் புலனாய்வு பிரிவே அதனை கூறியதாக கூறினார். புலனாய்வு பிரிவுக்கு என்ன வசதிகள் உள்ளது? புலனாய்வு பிரிவு கூறியதை ஒரு மருத்துவர் கூற முடியுமா? மேலும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தை சுகாதார துறையினர் தாரைவார்த்துவிட்டதாக கூறுவதுடன்,
தனிமைப் படுத்தல் நிலையங்களை சுகாதாரதுறை மருத்துவ அதிகாரிகள் அவதானிக்கவில்லை. எனவும் கூறியிருக்கின்றார். இது மிக பிழையான கருத்தாகும். உலகம் முழுவதும் தனிமைப்படுத்தல் நிலையங்களை இராணுவமே பராமரிக்கலாம். குறிப்பாக இராணுவ கண்காணிப்பில் உள்ள
கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தே தப்பி ஓடியிருக்கின் றார்கள். இவ்வாறான நிலையில் மருத்துவர்களும், சுகாதார பரிசோதகர்களும் தனிமைப்படுத்தல் நிலையத்தை நடாத்த முடியுமா? மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கோ,
மாகாண சுகாதார பணிப்பாளருக்கோ எந்தவெரு விடயமும் கூறப்படுவதில்லை. தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிக் கல் உருவானால் மட்டுமே சுகாதார பிரிவுக்கு வருகின்றனர். இதனை அறியாமல் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் பேசுகிறார்கள்.
இவர்களே எனக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், என்னை இனவாதியாக சித்தரித்து மீண்டும் நான் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளேன் என்றார்.