SuperTopAds

ராஜித சேனாரத்னவின் பிணை ரத்து - கைது செய்ய விரைந்தது சிஐடி!

ஆசிரியர் - Admin
ராஜித சேனாரத்னவின் பிணை ரத்து - கைது செய்ய விரைந்தது சிஐடி!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை அனுமதியை, கொழும்பு மேல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வௌர்ளை வான் கடத்தல்கள் குறித்து அம்பலப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பான வழக்கில், ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால், கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி பிணை அனுமதி வழங்கப்பட்டது.

இந்த பிணை அனுமதியை ரத்துச் செய்யக் கோரி, சட்டமா அதிபர் தரப்பில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைகளை நடத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண, இன்று தமது தீர்ப்பை அறிவித்தார்.

இதன்போதே, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கீழ் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை அனுமதியை ரத்துச் செய்து உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேக நபரான ராஜித சேனாரத்ன தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், ராஜித சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதம நீதிவான், லங்கா ஜயரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ராஜித சேனாரத்னவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.