யாழ்.மாவட்ட மக்கள் மீண்டும் அச்ச மனோநிலையில்..! வீடு வீடாக சென்று குடும்ப விபரம், குடும்ப புகைப்படம் கேட்கும் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்கள் மீண்டும் அச்ச மனோநிலையில்..! வீடு வீடாக சென்று குடும்ப விபரம், குடும்ப புகைப்படம் கேட்கும் இராணுவம்..

யாழ்.மாவட்டத்தில் வலி,வடக்கு பகுதிகளில் தற்போது இராணுவம் வீடு வீடாக சென்று குடும்ப விபரங்களை சேகரிப்பதுடன், குடும்ப புகைப்படத்தையும் எடுத்து செல்கின்றனர். 

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மட்டுமல்ல வேறு பகுதிகளில் வாழும் மக்களும் அச்சத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். 

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பட்டிக்கடவை பகுதியான ஜே/282 கிராம சேவகர் பகுதியில் கடந்த இரு நாட்களாக வீடுகளிற்கு செல்லும் இராணுவத்தினர் 

படிவம் ஒன்றை கொடுத்து நிரப்பி ஒப்பம் பெறுவதோடு தாம் எடுத்துச் செல்லும் புகைப்படக் கருவியில் புகைப்படத்தினையும் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு திரட்டும் விபரம் எதற்காக என்ற தகவலும் மக்களிற்கு வழங்கப்படவில்லை என்பதோடு அரச நிர்வாக இயந்திரத்திற்கும் தெரியப்படுத்தப்படவில்லை.

என்றே தெரிவிக்கப்படுவதனாலேயே தமக்கு அச்சம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , 

தற்போது வரையில் இது தொடர்பான எந்த தகவலையும் படையினர் வழங்காத நிலையில் எதற்காக பெறப்படுகின்றது என்பதும் தெரிவிக்கப்படவில்லை. 

இருப்பினும் படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பதிலளிப்பதாக தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு