SuperTopAds

ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் இராணுவ திணிப்பு தீவிரமாகிறது..! இதுவரை 22 முக்கிய சிவில் நிர்வாக துறைகளுக்குள் புகுத்தப்பட்டுள்ள இராணுவம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் இராணுவ திணிப்பு தீவிரமாகிறது..! இதுவரை 22 முக்கிய சிவில் நிர்வாக துறைகளுக்குள் புகுத்தப்பட்டுள்ள இராணுவம்..

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வைால் செயலர்களாக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் சிவில் சேவைக்குள் நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளின் எண் ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

கோத்தாபய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சிவில் நிர்வாகத்துக்குள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட படையதிகாரிகள் விவரம் வருமாறு,

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன- தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தின் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா- உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர் பிலான ஜனாதிபதி செயலணி, இராணுவத் தளபதி, கொரோனா ஒழிப்புச் செயலணி 

மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல- பிரதானி, ஜனாதிபதி செயலகம் 

மேஜர் ஜெனரல் கருணாரத்ன எகோடவேலா- தலைவர், கொரோனா சுகாதார பராமரிப்பு சமூக பாதுகாப்பு நிதியம் 

அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ்- மேலதிக செயலர், ஜனாதிபதி செயலகம் 

மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க- தலைவர், துறைமுக அதிகாரசபை 

மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்ச்சி- பணிப்பாளர் நாயகம், பல்நோக்கு அபிவிருத்தி செயலணி 

மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா- தலைவர், வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு செயலணி 

மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்- தலைவர், தேசிய புலனாய்வு பணியகம்

மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியா- பணிப்பாளர், சுங்க திணைக்களம் 

மேஜர் ஜெனரல் தர்ஷனா ஹெட்டியாராச்சி- தலைவர், இலங்கை புனர்வாழ்வு ஆணைக்குழு 

யாப்பா சேனாதிபதி- ஜனாதிபதி செயலகம் 

மேஜர் ஜெனரல் சந்திரசிறி - தலைவர், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை 

பிரிகேடியர் துவான் சுரேஷ் சல்லே- தலைவர், இலங்கை புலனாய்வு நிறுவனம் 

ஏஎஸ்பி பிரசன்னாடி அல்விஸ்- பணிப்பாளர் , தீவிரவாத விசாரணை பணியகம் 

மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக- தலைவர், நுகர்வோர் அதிகார சபை 

சீ.டீ. விக்ரமரத்ன - உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி 

ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ்- உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி 

மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க- உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி 

ஏர் மார்ஷல் ரொஷான் குணதிலக- ஆளுநர், மேல் மாகாணம் 

மேஜர் ஜெனரல் எம். ஆர். டபிள்யு. சொய்ஸா- தலைவர், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் 

மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க- செயலாளர், சுகாதார அமைச்சு