SuperTopAds

பாடசாலைகள் மீள ஆரம்பம்..! விசேட சுற்றறிக்கை வெளியானது, தயார்ப்படுத்தலுக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் மீள ஆரம்பம்..! விசேட சுற்றறிக்கை வெளியானது, தயார்ப்படுத்தலுக்கு பணிப்பு..

பாடசாலைகள், கல்வி நிலையங்கள், நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த விசேட சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இதற்கமைய அனைத்து மாகாண, வலய மற்றும் நிறுவன மட்டங்களில் உள்ள சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். 

மற்றும் அந்தந்த கல்வி வளாகங்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு பாடசாலை / நிறுவனத்திலும் வாயில்கள், வெளியேறும் இடங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவற்றில் 

கை கழுவுதல் வசதிகளை நிறுவுதல். தொடர்ச்சியான நீர் விநியோகத்தை எளிதாக்குதல். பாடசாலை தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு 

பணிகளை முடித்து வளாகத்தை சுத்தம் செய்தல்வேண்டும். நிறுவன வளாகங்களை சுத்தம் செய்தல், அனைத்து பகுதிகளையும் கிருமித் தொற்று நீக்கி விசிறல். 

உடலின் வெப்பத்தினை அளவிடுவதற்கான பொருத்தமான இடத்தினைத் தீர்மானித்து பொருத்தமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளல்.

நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் தொடங்கப்பட்ட பின்னர் நோயின் அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு அம்புலன்ஸ் வசதி அமைத்தல்.

கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பொறுப்புகளை வழங்குதல் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்கல்.

பெற்றோர், பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கங்களுக்கு அறிவுறுத்தல். கழிவு அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு.

சுகாதார அதிகாரிகள் வழங்கிய சுகாதாரப் பாதுகாப்பு உத்தரவுகள் உள்பட்டு அனைத்து பாடசாலைகள், பிரிவேனாக்கள், கல்வியியற் கல்லூரிகள், 

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்கும் முடிவு எடுக்கப்படும் . என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.