சுகாதார அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க!
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க , அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சுகாதார அமைச்சின் செயலாளராக இது வரையில் கடமையாற்றிய பத்ராணி ஜயவர்தன வர்த்தக அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.