ஜனாதிபதியின் தீர்மானம் மிக ஆபத்தானது..! அடுத்த சில நாட்களில் தொற்று இரட்டிப்பாகும், மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..
இலங்கையில் முன்னேற்பாட்டு திட்டங்கள் எவையும் இல்லாமல் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது மிக ஆபத்தான தீர்மானம். என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று காலை கொழும்பு- பொறளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயந்த பண்டார மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், முன்னேற்பாட்டு திட்டங்கள் எவையும் இல்லாமல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினால் கொரோனா தொற்று நாட்டில் இரட்டிப்பாகும்.
என மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.