SuperTopAds

உண்மையை உணருங்கள், ஒத்துழையுங்கள். ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
உண்மையை உணருங்கள், ஒத்துழையுங்கள். ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை..!

நாடு வழமைக்கு திரும்பியிருக்கும் நிலையில், உங்களையும், உங்கள் குடும்பத்தவர்களையும், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அந்த உண்மை உணர்ந்து கொண்டு நடவுங்கள் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார். 

இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் ஊடாக நாட்டு மக்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது,  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் - மார்ச் 18ஆம் திகதியிலிருந்து இலங்கை முழுவதுமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதிக ஆபத்து நிறைந்த பகுதிகள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முதன்மை வணிக நகரமாகிய கொழும்பின் வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறன. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற, 

சுகாதார ரீதியில் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியிலும் நாம் பலம் பெற்றிருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை நாம் எல்லோரும் இப்போது உணர்ந்திருக்கின்றோம். மீண்டும் பணிகளுக்குச் செல்லும் உங்களுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற அமைப்புகள் நிறைய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.

அவற்றை முழுமையாகப் பின்பற்றி உங்களையும், சக பணியாளர்களையும், உங்கள் குடும்பத்தினரையும், இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்க உதவுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.