கொரோனா தடுப்பு மருந்தை இஸ்ரேல் கண்டு பிடித்தது!!
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பென்னட் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான (ஐ.ஐ.பி.ஆர்) இல் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என கூறி உள்ளார்.
ஆன்டிபாடி செய்முறை காப்புரிமை பெறுகிறது என்று ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா கூறினார். அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார் என தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய இரண்டு சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒன்று இந்தியாவிலிருந்து, மற்றொன்று அமெரிக்காவிலிருந்து.
சிறிய தெற்கு நகரமான யெருஹாமில் இஸ்ரேலின் முதல் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை திறக்க பெரிய திட்டங்களை இஸ்ரேல் வகுத்துள்ளது இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.பி.ஆர்) மற்றும் இரண்டு வருங்கால சர்வதேச மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும் என்று யெருஹாம் உள்ளூராட்சி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.