குரும்­ப­சிட்­டி­யில் வீடு புகுந்த கொள்ளையர்களால் நகை மற்றும் சைக்கிள் அபகரிப்பு

ஆசிரியர் - Admin
குரும்­ப­சிட்­டி­யில் வீடு புகுந்த கொள்ளையர்களால் நகை மற்றும் சைக்கிள் அபகரிப்பு

அதி­காலை வீடு புகுந்த கொள்­ளை­யர் குடும்­பத் தலை­வர்­க­ளைத் தாக்­கி­விட்டு நகை­க­ளை­யும் துவிச்­சக்­க­ர­வண்­டி­யை­யும் எடுத்­துச் சென்­ற­னர். தாக்­குண்­ட­வர்­க­ளுக்­குத் தண்­ணீர்   ­கொ­டுத்து மிள­காய்த் தூளை வீடு முழு­தும் வீசி எறிந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தெல்­லிப்­பழை குரும்­ப­சிட்­டி­யில் நேற்று அதி­காலை 2 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது. கறுப்புத் துணி­யால் முகத்தை மூடி மறைத்­துக்­கொண்டு வாள், கத்தி, கொட்­டன் என்­ப­வற்­று­டன் வந்­தி­ருந்த 4 பேரே கொள்­ளை­ய­டித்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வீட்­டுக்­க­தவை உடைத்­துக்­கொண்டு உள்­நு­ழைந்­த­போது உறக்­கத்­தி­லி­ருந்த கண­வன் மனை­வி­யான வயோ­தி­பர்­கள் இரு­வ­ரும் விழித்­துக் கொண்­ட­னர்.

அவர்­க­ளி­டம் தாலிக்­கொடி எங்கே என்று கேட்­ட­வாறு தாம் கொண்டு சென்­றி­ருந்த கொட்­ட­னால் தாக்­கி­யுள்­ள­னர். அது தம்­மி­டம் இல்லை என்று கூறி­ய­தால் குடும்­பப் பெண் அணிந்­தி­ருந்த தோடு­க­ளைக் கொள்­ளை­யர் கழற்றி எடுத்­துள்­ள­னர். பின்­னர் வீடு முழு­தும் சல்­ல­டை­போட்­டுத் தேடு­தல் நடத்தி ஒன்­ற­ரைப் பவுண் சங்­கி­லி­யை­யும் கொள்­ளை­யர் எடுத்­துள்­ள­னர்.

தாக்­கு­த­லுக்கு இலக்­கான இரு­வ­ரும் தாக­மா­க­வுள்­ளது தண்­ணீர் எடுத்­துத் தாருங்­கள் என்று கொள்­ளை­ய­ரி­டம் கேட்­டுள்­ள­னர். அதன்­பின்­னர் கொள்­ளை­யர் சமை­ய­ல­றை­யில் இருந்து தண்­ணீர் எடுத்­துக் கொடுத்­துள்­ள­னர்.

அது­மட்­டு­மன்றி அங்­கி­ருந்து மிள­காய்த் தூளை எடுத்து வீடு முழு­தும் வீசி எறிந்து, அங்­கி­ருந்த அலை­பே­சியை பல துண்­டு­க­ளாக உடைத்து வீசி எறிந்­த­னர். பின்­னர் அங்­கி­ருந்த துவிச்­சக்­க­ர­வண்­டி­யை­யும் எடுத்­துச் சென்­ற­னர் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு­டர்­கள் ஓடிய பின்­னரே அயல்­வீட்­டாரை அழைத்து நடந்­த­தைக் கூறி­யுள்­ள­னர். அதன்­பின்­னர் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. கொள்­ளை­யர்­க­ளில் ஒரு­வர் சிங்­கள மொழி­யில் கதைத்­தார் என்­றும் விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு