வாரத்தில் 5 நாட்கள் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால் இவ்வளவு நன்மையா..?
உடற்பயிற்சி என வரும் போது, எவ்வளவு தான் இருந்தாலும் சைக்கிள் ஓட்டுவதைப் போல் வராது என்பார்கள் சிலர். ஏனெனில், சைக்கிள் ஓட்டுவதால்;; உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுத்துகின்றது.
அத்துடன், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகும் செய்றபாடும் நடைபெறும். இதனால், நினைவாற்றல் மேம்படும். எனவே வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது நல்லது.
சைக்கிள் ஓட்டும் போது என்ன நடக்கிறது என்பதை எம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. அவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம்.
01. அரை மணி நேர சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் 300 கலோரிகள் வரை எரிக்கப்படும். முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும்.
02. 20 நிமிடங்களுக்குப் பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும்.
03. 30 நிமிடங்களுக்குப் பிறகு கொழுப்புச் சத்து குறையும்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகள் இந்த சைக்கிள் ஓட்டத்தின் போது எரிக்கப்படுகின்றது. பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெறுவதோடு, உடலின் இரத்த ஓட்டமும் சீராகின்றது. அதுமட்டுமின்றி, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் என்பன கட்டுப்படுத்தப்படுவதோடு உடலின் வெப்பம் மற்றும் வியர்வை என்பனவும் முறையாக வெளியேற்றப்படுகின்றது.
சைக்கிள்களில் பல வகைகள் உள்ளன. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. அதாவது நிற்கும்போது, நம்முடைய இடுப்பு உயரத்துக்கு சீட் இருக்க வேண்டும். சீட் உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். முதல் முறையாக சைக்கிளிங் செய்பவர்கள் மெதுவாகத் தொடங்கி நன்கு பழகிய பிறகு, வேகத்தையும், தொலைவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்