SuperTopAds

பிரித்தானியாவில் கோவிட்-19 நோய் இறப்புகளின் எண்ணிக்கை 26,097 ஆக அதிகரிப்பு!

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் கோவிட்-19 நோய் இறப்புகளின் எண்ணிக்கை 26,097 ஆக அதிகரிப்பு!

பிரித்தானிய அரசு இன்று அறிவித்த தகவலின் படி பிரித்தானியாவில் கோவிட்-19 நோயின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 165,221 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 818539 கொரோன வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 26097 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று அறிவித்ததை விட 4419 உயிழப்புகள் அதிகமாகும். இந்த எண்ணிக்கையில், காப்பகங்கள், வீடுகள் போன்ற இடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டதால் இவ்வாறு உயர்வடைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாளில் வருகின்ற தகவல்கள் வெவ்வேறு நேரங்களில் வருவதால் தகவல்கள் சிறிது மாற்றமடையலாம், இதன் காரணமாக ஒரு சில வேளைகளில் சில நாட்கள் கணக்கில் மாறுபடலாம், இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட நாளில் மாலை 5 மணிக்கு வருகின்ற தகவல்கள் அன்று மாலை 5 மணிவரைக்கும் இறந்தவர்களின் முழு எண்ணிக்கையையும் பிரதிபலிக்காமல் இருக்கலாம்.