SuperTopAds

கிம் ஜாங் வுன்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது - வெளியான உண்மை தகவல்!

ஆசிரியர் - Admin
கிம் ஜாங் வுன்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது - வெளியான உண்மை தகவல்!

தற்போதைய சூழலில் கிம் ஜாங் வுன்னால் தாமாகவே எழுந்து நிற்கவோ, நடமாடவோ முடியாது என வடகொரியாவை விட்டு வெளியேறுயுள்ள முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன் திடீரென்று நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதன் காரணம் அவர் பலவீனமாக இருப்பதே என வடகொரியாவின் முன்னாள் அதிகாரி தா யோங்-ஹோ தெரிவித்துள்ளார். 

கிம் ஜாங் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா இல்லையா என்பது தொடர்பில் தமக்கு உறுதியான தகவல் ஏதும் இல்லை என கூறும் தா யோங்-ஹோ, அவர் பலவீனமான நிலையில் இருப்பதாலையே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றார்.

இருப்பினும், கிம் தொடர்பில் உறுதியான தகவல்கள் அவரது குடும்பத்தாருக்கும், நெருங்கிய சில அதிகாரிகளுக்கும் தெரிய வாய்ப்பிருப்பதாக தா யோங்-ஹோ தெரிவித்துள்ளார். தலைநகர் Pyongyang-ல் கடந்த 11 ஆம் திகதி கட்சி உயர் மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் கிம் ஜாங் வுன், இதுவரை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் இறந்ததாகவும், அவருக்கு மாபெரும் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் வடகொரியாவில் நடைபெறுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே, தென் கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு கிம் ஜாங் வுன் இருப்பிடம் தெரியும் எனவும், ஆனால் அதை தற்போது வெளியிடுவது முறையல்ல எனவும் தெரிவித்துள்ளன. கிம் ஜாங் வுன் வடகொரியாவின் வெறும் ஒரு தலைவர் மட்டுமல்ல என கூறும் தா யோங், அவர் வடகொரியாவின் தந்தை என போற்றப்படும் ஒரு தலைவரின் பேரன். ஆகையால் இந்த விவகாரம் நீண்ட நாள் மூடிவைக்கவும் முடியாது என கூறியுள்ள அவர், வொன்சன் நகரில் கிம் பயன்படுத்தும் சொகுசு ரயில் காணப்படுவதும், ஒரு கண் துடைப்பு வேலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார் தா யோங்.