இத்தாலியில் 27 ஆயிரத்து 359 பேரின் கொரோனாவால் பலி!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது.
அங்கு மொத்தமாக 27 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெய்ன் காணப்படுகிறது. ஸ்பெய்ன் நாட்டை பொறுத்த வரையில் அங்கு 23,822 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துக்கொண்டுள்ளது.
தற்போது கடுமையாக்கப்பட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டின் சட்ட திட்டங்கள் அனைத்தும் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் நான்காவது கட்ட தளர்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜீன் மாதத்தில் தொடங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.