SuperTopAds

ஜனாதிபதியை மீண்டும் எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..! நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியை மீண்டும் எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..! நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்..

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அடையாள அட்டையின் இறுதி எண் நடவடிக்கை நாட்டில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி ஒவ்வொரு தினங்களிலும் ஒவ்வொரு நபர்கள் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று எல்லா வீடுகளையும் தாக்குவதற்கான சாத்தியம் 

அதிகம் உள்ளன. இதனை கருத்தில் கொள்ளாவிட்டால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்துகொள்ள பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி வரும். தொற்று அறியப்படாத இடங்களில் கூட தற்போது தொற்று பதிவாகியுள்ளது. 

எனவே இந்த நடைமுறை ஆபத்தானதாகும் என கூறப்பட்டுள்ளது.