கொரோனா அச்சம்: மேலும் 14 நாடுகள் உள்நுழைய தடை!! -ஜப்பான் அரசு அதிரடி-
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒவ்வொரு நாடும் சூழ்நிலைக்கு ஏற்ப, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்துள்ளது.
அவ்வகையில் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ரஸ்யா, பெரு, சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 14 நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய தடை விதித்து பிரதமர் சின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான நுழைவுத் தடை மற்றும் விசா கட்டுப்பாடுகள், ஏப்ரல் 30-ல் இருந்து மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா வைரசால் 13,385 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 364 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.