SuperTopAds

1000 பிரேத பைகளை கேட்டதற்கு காரணம் 1000 பேர் இறக்கபோகிறார்கள் என்பதல்ல..! மக்கள் பீதியடையவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
1000 பிரேத பைகளை கேட்டதற்கு காரணம் 1000 பேர் இறக்கபோகிறார்கள் என்பதல்ல..! மக்கள் பீதியடையவேண்டாம்..

1000 பேர் இறக்கப்போகிறார்கள் என்பதற்காக 1000 பிரேத பைகளை கேட்கவில்லை. என கூறியிருக்கும் சுகாதார அமைச்சு, மக்கள் அச்சப்படதேவையில்லை. எனவும் சு காதார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவத ற்கான 1000 உறைகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் சுகாதார அமைச்சு கோரியுள்ள து. இந்நிலையில் இதற்கு பலரும் அச்சம் தெரிவித்திருந்த நிலையில் 

இதுகுறித்து தெளிவு படுத்தியுள்ள சுகாதார அமைச்சு அதிக இறப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் இறப்பு விகிதம் மற்றும் COVID-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 

இலங்கையில் குறைந்த மட்டத்தில் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது, 

சர்வதேச நெறிமுறையை பின்பற்றி சடலங்கள் அப்புறப்படுத்தவும் இந்த விசேட உறைகள் பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் 

செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 

தடயவியல் ஒருங்கிணைப்பாளருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கையில் வைரஸ் பரவல் தீவிரமடையாவிட்டாலும் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த கடிதம் 

அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.