விழுந்து..விழுந்து.. சிரிப்பிங்க.. யாழில் அரசியல் காமெடி

ஆசிரியர் - Editor I
விழுந்து..விழுந்து.. சிரிப்பிங்க.. யாழில் அரசியல் காமெடி

2018 ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விசித்திரமான சம்பவம் ஒன்று யாழ் மாநகர சபை பிரதேசத்தில்   பதிவாகி உள்ளது.


குறித்த தேர்தலில் யாழ் மாநகர சபை சார்பாக தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 14 ஆசனங்களை  மக்களின் ஆணையுடன் பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு இரண்டு பட்டியல் உறுப்பினர்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் ஒதுக்கபட்டிருந்தது.


இந்நிலையில் இரண்டு பட்டியல் ஆசனங்களும் எவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என இன்னும் அக் கட்சி தீர்மானம் எடுக்காத நிலையில் 13 ஆம் வட்டாரத்தில் தோல்வியடைந்த ஒரு வர்த்தகருக்கு  தான் ஆசனம் வழங்கப்படும் என  தன்னிடம் கட்சி தெரிவித்ததாக  வடக்கு மாகாண சபை நியமன உறுப்பினர் தோல்வி அடைந்த தரப்பினர் தெரிவித்தாராம்.


இதனை  நம்பிய அந்த தோல்வி அடைந்த வேட்பாளர் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான சட்டவிரோத வெடிகளை(மூலவெடிகள்) கொள்வனவு செய்து  ஐந்துசந்தி பகுதி  ஒஸ்மானியா கல்லூரி சூழலில் கொளுத்தி போட்டிருந்தார்.


இந்த வெடி கொளுத்தலினால்   பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் வீதியில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக  கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.


இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினரை அழைத்த கட்சி முக்கியஸ்தர்கள்  இவ்விரு ஆசனங்களும் பெண்களுக்கு தான் ஒதுக்கி இருப்பதாகவும் வேறு எவருக்கும் பகிர்ந்து அளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.


இதனை அடுத்து தான் பதவியை இராஜனாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளாராம்.


மேலும்  பட்டாசுகளை  பெருமளவில்    வீதிகளில் கொளுத்திய வேட்பாளரை மக்கள் ஏசியதுடன் தவறான தகவலை தனக்கு வழங்கி  சூழலை மாசுபடுத்திய   தோல்வி அடைந்த 13 ஆம் வட்டார  வேட்பாளர் வடக்கு மாகாண சபை உறுப்பினரை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு