SuperTopAds

பிரித்தானியாவில் மேலும் 596 பேர் கோவிட்-19 நோயால் மரணம்!

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் மேலும் 596 பேர் கோவிட்-19 நோயால் மரணம்!

பிரித்தானிய அரசு இன்று அறிவித்த தகவலின் படி பிரித்தானியாவில் கோவிட்-19 நோயின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120,067           ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று அறிவித்ததை விட 596 உயிழப்புகள் அதிகமாகும்.

இந்த மொத்த எண்ணிக்கையில் மருத்துவமைக்கு வெளியே இறந்தவர்கள் உள்ளடக்கப்படவில்லை, அதாவது வீடுகள், காப்பகங்கள் போன்ற இடங்களில் இறந்தவர்கள் இந்த தரவுகளில் உள்ளடக்கப்படவில்லை. இதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாளில் வருகின்ற தகவல்கள் வெவ்வேறு நேரங்களில் வருவதால் தகவல்கள் சிறிது மாற்றமடையலாம், இதன் காரணமாக ஒரு சில வேளைகளில் சில நாட்கள் கணக்கில் மாறுபடலாம், இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட நாளில் மாலை 5 மணிக்கு வருகின்ற தகவல்கள் அன்று மாலை 5 மணிவரைக்கும் இறந்தவர்களின் முழு எண்ணிக்கையையும் பிரதிபலிக்காமல் இருக்கலாம்.