SuperTopAds

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதி நிறுத்தம்!! -அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அதிரடி-

ஆசிரியர் - Editor III
உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதி நிறுத்தம்!! -அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அதிரடி-

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு அமைய உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதி வழங்குவது நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கொரோனாவால் உருவான அவசர நிலைமையை பக்கச்சார்பற்ற விதத்தில் மதிப்பிடுவதற்கு தனது நிபுணர்களை பயன்படுத்தும் தனது பணியை உலக சுகாதார ஸ்தாபனம் சரியாக செய்திருந்தால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தியிருக்கலாம் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வெளிப்படைத்தன்மையற்ற போக்கினை உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் அது சீனாவிலிருந்து வருபவர்களிற்கு தடை விதிக்கும் அறிவிப்பை நான் முன்னரே அறிவித்திருப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வருபவர்களிற்கு தடை விதி;ப்பதை எதிர்க்கும் ஆபத்தான முடிவை உலக சுகாதார ஸ்தாபனம் எடுத்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா 500 மில்லியன் டொலர்களை வருடாந்தம் வழங்கி வருகின்றது.