மயிலிட்டி துறைமுகம் உண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளதா?

ஆசிரியர் - Editor I
மயிலிட்டி துறைமுகம் உண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளதா?

வலிகாமம்  வடக்கில்  இரானுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கின்ற ம யிலிட்டித் துறைமுகம் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும் ஆனால்முழுமையாக விடுவிக்கப்பட்டள்ளதாக  பலரும்  இணைந்து  பொய்ப் பிரச் சார்தை முன்னெடுப்பதாகவும் மயிலிட்டி மக்கள் கூறுகின்றனர்.


எனவே மயிலிட்டி துறைமுகத்தையும்அதனை அண்மித்த பிரதேசமக்களது  காணிகளையும் முழுமையாக  விடுவிக்க வேண்டு மென்றும்   மயிலிட்டி   மிள்குடியேற்றச் சங்கத்தினர்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.


 கடந்த 1990 ஆம் ஆண்டு முதல்வலகாமம் வடக்கின் பல பகுதிகள்இரானுவத்தினரால்ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த பலதசாப்தங்களாக படையினரின்கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.ஆயினும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு  மக்கள்  மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மயிலிட்டிதுறைமுகமும் அண்மையில்விடுவிக்கப்ப ட்டு  அப்பகுதி மக்களும்  மீளக்குடியமர்த்தப்பட்டள்ளதாகவும் அரச அதிகாரிகள்  முதல்  அரசியல்வாதிகள் என சகலரும் பொய்யா ன பிரச்சாரத்தையே  முன்னெடுத்து வருகின்றனர்.


உண்மையில்  மயிலிட்டித் துறைமுகப்  பகுதி  விடுவிக்கப்பட்டபோதும் துறைமுகம் முழுமையாகவிடுவிக்கப்படாது படையினர்பாதுகாப்பு வேலிகளை அமைத்துஅரைவாசிப் பகுதியை தமதுகட்டுப்பாட்டிலேயெ  வைத்திருக்கின்றனர்.  அதேபோன்றே மயிலிட்டிப் பிரதேசம் முழுமையாக  விடுவிக்கப்பட்டு மக்கள்  மிளக்குடியமர்த்தப்பட்டள்ளதாககூறப்பட்டாலும் இன்னும் பலபகுதிகள் விடுவிக்கப்படாது படையினர் வசமே  தற்போதும் இருக்கின்றது.

 

ஆகவே  மயிலிட்டித்துறைமுகத்தையும்  மயிலிட்டிப் பிரதேசத்தையும் முழுமையாகவிடுவித்து அப் பகுதி மக்கள்மீளக்குடியமர்த்தப்பட்டு சுதந்திரமாகதொழில் செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்றும் பிரதேச மீள்குடியேற்றச் சங்கமும் அப்பகுதிமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு