SuperTopAds

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை தாருங்கள்!! -மோடியிடம் டிரம்ப் வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor III
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை தாருங்கள்!! -மோடியிடம் டிரம்ப் வேண்டுகோள்-

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தரும்படி பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் திகதி தடை விதித்தது.  எனினும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.


இதற்கிடையே, இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.